Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு என்ட் கார்டே இல்லையா?

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (10:57 IST)
அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 7,135 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 31,667 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 20,070 பேரும், டெல்லியில் 27,654 பேரும், ராஜஸ்தானில் 10,599 பேரும், மத்திய பிரதேசத்தில் 9,401 பேரும், உத்தர பிரதேசத்தில் 10,536 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments