Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 28 ஆயிரம் புதிய பாதிப்புகள் – இந்திய நிலவரம்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (09:30 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 8 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 28 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 23,174 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,54,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,289 பேர் பலியான நிலையில் 1,40,325 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,38,470 ஆக உள்ள நிலையில் 1,966 பேர் பலியாகியுள்ளனர். 89,532 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,12,494
குஜராத் – 41,820
உத்தர பிரதேசம் – 36,476
மேற்கு வங்கம் – 30,013
தெலுங்கானா – 34,671
ராஜஸ்தான் – 24,392
மத்திய பிரதேசம் – 17,632
கர்நாடகா – 38,843
ஹரியானா – 21,240

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments