1 லட்சத்து 12 ஆயிரம் பாதிப்புகளை தொட்ட இந்தியா! உச்சத்தில் மராட்டியம்!

Webdunia
வியாழன், 21 மே 2020 (09:46 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,390 பேர் பலியான நிலையில் 10,318 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 13,191 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 12,537 பேரும், டெல்லியில் 11,088 பேரும், ராஜஸ்தானில் 6,015 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,735 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,175 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments