இந்தியாவில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா - உச்சத்தில் மராட்டியம்

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (08:51 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,815 லிருந்து 11,439 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 377 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1190 லிருந்து 1306 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1204 பேரும், டெல்லியில் 1561 பேரும், ராஜஸ்தானில் 969 பேரும், தெலுங்கானாவில் 624 பேரும், மத்திய பிரதேசத்தில் 730 பேரும், உத்திர பிரதேசத்தில் 660 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments