நாடு முழுவதும் 20 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Webdunia
புதன், 26 மே 2021 (08:25 IST)
நாடு முழுவதும் 20 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று வரை நாடு முழுவதும் 20,04,94,991 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,07,000 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 45 - 60 வயதுக்கு உட்பட்ட 6,20,00,000 பேர் முதல் டோஸ் ஊசியை போட்டுக்கொண்டுள்ளதாகவும் இந்த வயதிற்கு உட்பட்ட ஒரு கோடி பேருக்கு 2வது டோஸ் போட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments