Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:36 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

ALSO READ: கமல்ஹாசனை சந்தித்த இங்கிலாந்து எம்பி.. அரசியல் பேசியதாக தகவல்!

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,75,473 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,562 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,04,553 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 42,358 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments