Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 4,777 பேர் பாதிப்பு; 23 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (10:36 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,68,114 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,510 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,95,610 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 43,994 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments