Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனிலிருந்து திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (14:34 IST)
உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் . 

 
உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். 
 
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது. அதன்படி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்தது.
 
இதனிடையே ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம், உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களுடன் புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை 4 மணிக்கு மும்பை தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது. RTPCR சோதனைக்கான கட்டணத்தை விமானநிலையமே ஏற்கும் எனவும், கொரோனா இல்லை என வந்த பிறகே இந்தியர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் எனவும் மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments