Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவலும் உள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (19:24 IST)
இந்தியாவில் கொரொனா தொற்று வேகம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரோனா பரவியது. இது அடுத்தடுத்து, 2-வது,3-வது, 4-வது அலையாகவும், உருமாறிய வைரஸாகவும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபகாலமாய குறைந்திருந்த கொரொனா தொற்று இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடந்த 7 நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 1890 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இது கடந்த 210 நாட்களில் உருவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். அதேபோல், 19 முதல் 29 சதவீதம் வரை இறப்புகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக அரியானா,  உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் கோவா,இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் மாதம்10, 11 ஆகிய தேதிகளில்  நாடு முழுவதிலுள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை நடத்த சுகாதார அமைச்சகம் மாநிலங்கள்  மற்றும் யூனியன்களை அறிவுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments