Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பலி: 3வது நாடாக உருவெடுத்துள்ள இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:04 IST)
இந்தியாவில் பாதிப்பு 4 கோடியே 19 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,19,52,712 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,072 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,00,055 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,00,17,088 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,35,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 9.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். பாதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 6.30 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments