Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிந்த தினசரி பாதிப்புகள்! - இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:36 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,866 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 05 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது. புதிதாக 41 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,074 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,28,670 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,50,877 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2,02,17,66,615 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16,82,390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

எனக்காக ஒரு வீடு கட்டவில்லை.. ஆனால் 4 கோடி மக்களுக்கு வீடு கட்ட உதவியுள்ளேன்: பிரதமர் மோடி

20 நிமிடத்தில் 2 பாட்டில் மது குடிக்கும் போட்டி.. பரிதாபமாக பலியான யூட்யூப் பிரபலம்!

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments