தொடர்ந்து ஒரு லட்சத்திற்கு கீழ் தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (09:37 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3 கோடியை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,422 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,88,135 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,88,44,199 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 7,02,887 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 28,00,36,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments