1,700 ஆக உயர்ந்த தினசரி பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (09:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,778 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,12,749 ஆக உயர்ந்தது.
 
மேலும் புதிதாக 62 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,16,605 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,542 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,73,057 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,81,89,15,234 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 30,53,897 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments