13 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்: இன்றைய இந்திய நிலவரம்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (10:02 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. 
 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,091 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,01,670 ஆக உயர்ந்தது.
அதோடு புதிதாக 340 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,00,925 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,38,556  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று 57,54,817 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,10,23,34,225 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments