Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்: இன்றைய இந்திய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:03 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,516 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,14,186 ஆக உயர்ந்தது.
 
அதோடு புதிதாக 501 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,690 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,155 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,14,080 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,37,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று 53,81,889 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments