1000-த்திற்கும் கீழ் தினசரி பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (10:01 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 975 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,40,947 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 796 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிம் முனீர் ஒரு மனநலமில்லாதவர்: இம்ரான்கான் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?

இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

நான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை: ராகுல் காந்தி கூறிய பிரேசில் மாடல் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments