14 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (10:04 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.   

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.    
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,306 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 443 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,762 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,67,367 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,67,695  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments