40,000-த்திற்கு கீழ் சென்ற தினசரி பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (09:53 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரமாக குறைந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 39,796 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,05,02,362 லிருந்து 3,05,42,158 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42,352 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 
 
அதேபோல் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,58,078-ல் இருந்து 2,97,00,430 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..

ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு.. இன்ஸ்டாகிராமால் சிக்கிய மன்மதன்..!

யாருக்கு எவ்வளவு தொகுதி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய திமுக!..

21 வயது இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்.. அதிர்ச்சி காரணம்?

தமிழகத்தில் வங்கதேச பயங்கரவாதிகள் கைது.. சட்டம் ஒழுங்கு குறித்து அதிமுக, பாஜக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments