Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினசரி பாதிப்பும், மரணமும் குறைவு... இன்றைய கொரோனா அப்டேட்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (09:46 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ள நிலையில் தினசரி பலி எண்ணிக்கை 2,000 கீழ் குறைந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  60,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,23,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதிதாக 1,647 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,85,137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாதொற்றில் இருந்து ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,60,019 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் இதுவரை 27,23,88,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments