Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காங்கிரஸ் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (07:30 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 10மணிக்கு எண்ணப்படுகின்றன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது
 
நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது
 
இன்று காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ண தொடங்கியவுடன் ஒரு சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது
 
சோனியாகாந்தி ஆதரவு பெற்ற வேட்பாளர் என கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் ப சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சசிதரூர் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுவதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது
 
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இந்த தேர்தலின் முடிவை பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments