Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனருடன் காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் பதவி யாருக்கு?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (18:22 IST)
கர்நாடக தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அவ்வப்போது திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. முதலில் காங்கிரசும் அதன் பின்னர் பாஜகவும் முன்னிலை பெற்றது. 
 
ஒரு கட்டத்தில் பாஜக 120 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா முதல்வர் பதவியை வரும் 17ஆம் தேதி ஏற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து 117 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சி தலைவர்கள் கூட்டாக கர்நாடக மாநில ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ஆட்சியமைக்க 111 பேர் தேவை என்ற நிலையில் தங்கள் அணியில் 117 பேர் உள்ளதாக ஆளுனரிடம் எடுத்து கூறியுள்ளனர். இதனால் இந்த அணியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று மாலை 6.15 மணிக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments