Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக.,வுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தமா ? பிரபல தலைவர் குற்றச்சாட்டு

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (14:30 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் விழுந்து விழுந்து வேலை பார்க்கின்றன.வேட்பாளர்கள் தேர்வுல் நடைபெற்று வருகின்றன. ஆனால் கூட்டணி உடன் பாடுதான் இன்னும் முடிவுக்கு வந்த மாதிரி இல்லை இன்னும் சவ்வாக இழுத்துக் கொண்டே செல்கிறது. அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைமைதான். 
இந்நிலையில் பாஜவுடன், காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு தொடர்ந்து பாஜகவுக்கு காங்கிரஸ் உதவி வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
 
வரும் தேர்தலுக்கு ஆம் ஆத்மி காங்கிரஸுடன் தான் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதியில் 6 தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்திருந்தார் கெஜ்ரிவால்.
இதனையடுத்து நேற்று டெல்லியின் காங்கிரஸ் தலைவருடனான ஆலோசனைக்குப் பிறகு  காங்கிரஸுடன் இனி கூட்டணியே ஆகாது என்று கூறினார்.
 
அதன் பின்னர் கெஜ்ரிவால் கூறியதாவது: இந்தியாவில் அனைவரும் மோடியை வீழ்த்த வேண்டி ஒரு அணியில் சேரும் போது காங்கிரஸ் மோடிக்கு ரகசியமாக உதவுகிறது என்றார்.
 
காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளை எதிர்த்து போட்டியிட ஆம் ஆத்மி எப்போதும் தயாராகவே உள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments