Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (18:17 IST)
நாட்டின் தேசிய கட்சியான பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் மனு ஒன்றை அளித்துள்ளது. இது அரசியலில் சில சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.  
 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக வீணடிக்கப்பட்டது. 
 
அதோடு சேர்த்து காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். 
 
இதன் இடையே பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால், இந்த நோட்டீஸ் கண்டுக்கொள்ளப்படவில்லை. 
 
எனவே, காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. மேலும்,  மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 48 உறுப்பினா்களின் ஆதரவு இருக்கிறது. இருப்பினும் தீா்மானம் நிறைவேற 50 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் ஆதரவு கோர வாய்ப்புள்ளது. இதனால் பாஜக சிக்கலில் சிக்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments