Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை மோடி செய்வதால் பொருமுகின்றனர் - நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை மோடி செய்வதால் பொருமுகின்றனர் - நிர்மலா சீதாராமன்
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (15:42 IST)
60 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை மோடி செய்வதால் பொருமுகின்றனர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 

 
சென்னையில் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நில மசோதாவில் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்திற்கு உள்ளே அமைதியும் காத்து காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.
 
பாஜக பொறுப்பேற்ற ஒராண்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை மோடி அரசு செய்வதை ஏற்கமுடியாமல் என மனம் பொதும்புகின்றனர். மோடி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  பல்வேறு முயற்சிகள், நடவடிக்கை காரணமாக இந்தியா எழுந்து வந்து கொண்டிருக்கிறது.
 
மோடி அரசு உங்களின் சூழ்ச்சிக்கு பயப்படாது. காங்கிரஸ் வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளிலும் 50 பொது கூட்டங்கள் நடத்தி, காங்கிரசின் சூழ்ச்சிகள் குறித்து விரிவாக கூறுவோம். நாடாளுமன்றத்தில் அவர்கள் செய்த குளறுபடிகள், நாடாளுமன்றத்தை முடக்கியது என அனைத்தையும் கூறுவோம்.
 
வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் என்ன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்து வருகிறோம். புது சட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம். பட்ஜடெ் கூட்டத்தொடரில் சிறப்பான முறையில் செயல்பட்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு வழி செய்தோம்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil