Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆணுறை தட்டுப்பாடு: எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்

ஆணுறை தட்டுப்பாடு: எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்
, வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:00 IST)
மத்திய அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் ஆணுறை வழங்கபட்டு வருகிறது. சமீபத்தில் கடந்த சில நாட்களாக இந்த ஆணுறை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தட்டுப்பாடு இந்தியாவின் 6 மாநிலங்களில் நிலவுகிறது.இதனால் எச்.ஐவி தொற்று குறித்து பொது சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.
 
அரியானா, உத்த்ரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆணுறை தட்டுப்பாடு கடந்த 8 மாதங்களாக நிலவி வருகிறது.இங்கு ஒப்பீட்டு அளவில் அதிக அளவு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது.
 
உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும்  தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் காட்டுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
பொது சுகாதார திட்டங்கள் மூலம் ஆணுறை வினியோகிக்கும் குழுக்கள் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கத்திற்கு அவசரமாக  வினியோகிக்க  ஆணுறை தேவை இருப்பதாக கடிதங்கள் எழுதி உள்ளன.
 
சமீபத்தில் இந்த பிரச்சினை மத்திய சுகாதார துறையிடம் எழுப்பபட்டது. இதை தொடர்ந்து  சுகாதார துறை செயலாளர் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தார்.
 
இந்த பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நாங்கள் இது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் இந்த பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர்  லோவ் வர்மா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil