Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவால் மிரட்டப்பட்டதாக புகார்..! டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

Senthil Velan
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:06 IST)
பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என தான் மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் செவ்வாய் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை கைது செய்ய சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் நானும், அதிஷியும் பிற ஆம் ஆத்மி தலைவர்களும் பாஜகவில் சேராவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என தன்னை மிரட்டியதாக அதிஷி  கூறினார்.
 
அதிஷியின் இந்த குற்றச்சாட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பியது. அதிஷிக்கு எதிராக புதன்கிழமை சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் அளித்தது.

ALSO READ: பிரபல கட்டுமான நிறுவனம் மீது ED பதிவு செய்த வழக்கு ரத்து.! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
 
இந்நிலையில் அதிஷி தனது குற்றச்சாட்டு பற்றி வருகிற திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments