Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் நடத்தும் காபி ஷாப்பை மூடச் சொன்ன முதலமைச்சர் - வலுக்கும் எதிர்ப்புகள்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (11:21 IST)
உத்திரபிரதேசத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தி வரும் காபி ஷாப்பை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூடச் சொல்லியிருப்பது, அப்பெண்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் சில மனித மிருகங்களின் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டு சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறவும், தன்னம்பிக்கையோடு வாழவும் உத்திரபிரதேசத்தில், ஷிரோஸ் ஹேங் அவுட் என்ற பெயரில் காபி ஷாப் நடத்தி வந்தனர். இவர்களின் முயற்சியை கண்டு வியந்த முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலம் முழுவதும் இதுபோல கடைகள் திறக்கப்படும் என கூறியிருந்தார். அதற்குள் அவரது ஆட்சி நிறைவு பெற்றது.
இந்நிலையில் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஷிரோஸ் ஹேங் அவுட்டை இழுத்து மூடும் படி உத்தரவிட்டுள்ளார். அதற்கு அவர் கூறியிருக்கும் காரணத்தை எங்கே சென்று சொல்வது? காபி ஷாப் வைத்தெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியாது. அவர்களின் மறுவாழ்வை உபி அரசு பார்த்துக் கொள்ளும். காபி ஷாப் நடத்துவது அவசியமற்றது என கூறியிருக்கிறார்.
யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க நினைக்கும் பெண்களை, இப்படியா பழிவாங்குவது என பல தரப்பு மக்கள் யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments