Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள்: ஏக்நாத் ஷிண்டே கொடுத்த விளக்கம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (15:54 IST)
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே என்ற ஒரு முதலமைச்சரும் தேவேந்திர பட்நாவிஸ் என்ற துணை முதலமைச்சரும் இருந்த நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மேலும் ஒரு துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்டார். 
 
நேற்றுவரை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித் பவார் இன்று தனது ஆதரவாளர்கள் எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்தித்து அரசியல் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் இரண்டு துணை முதல் அமைச்சர் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறிய விளக்கம் பின்வருமாறு:
 
தற்போது மகாராஷ்டிராவில் ஒரு முதலமைச்சரும் 2 துணை முதலமைச்சர்களும் உள்ளோம். இரண்டு இயந்திரங்களை கொண்டு இயங்கிய அரசு, தற்போது 3 இயந்திரங்களை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது ஆதரவாளர்களையும்  வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிராவை வலுப்படுத்தும்"என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments