ஆட்சியை கலைப்பேன்: பினராயி விஜயன் அமித்ஷாவிற்கு நறுக் பதில்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:56 IST)
கேரளாவில் சபரிமலை விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். 
 
இந்நிலையில், இந்த எச்சரிக்கைக்கு பினராயி விஜயன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, நீங்கள் யார் எனக்கு ஆர்டர் போட. நீங்கள் என்ன சுப்ரீம் கோர்ட்டா. இல்லை நீங்கள் சொன்னதைதான் சுப்ரீம் கோர்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 
 
என்னை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறீர்கள். ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை என பதிலடி கொடுத்துள்ளார். 
 
சபரிமலை விவகாரத்தின் போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து அமித்ஷா குரல் கொடுத்த நிலையில், இவ்வாறு பதில் அளித்துள்ளார் பினராயி விஜயன். 
 
பதிலை கொடுத்தோடு நிறுத்தாமல், மறுநாளே மேலும் சில போராட்டகாரர்களை கைது செய்யும்படி உத்தரவும் பிறப்பித்துள்ளார். அதன்படி, 500 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிம் முனீர் ஒரு மனநலமில்லாதவர்: இம்ரான்கான் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?

இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

நான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை: ராகுல் காந்தி கூறிய பிரேசில் மாடல் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments