Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக நிறைவேறிய குடியுரிமை சட்டதிருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் எங்கே?

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (07:25 IST)
மக்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தபோது அந்த மசோதாவுக்கான வாக்கெடுப்பின் போது திடீரென எதிர் கட்சி எம்பிக்கள் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 80 எம்பிக்கள் மட்டுமே மக்களவையில் வாக்களித்தனர் என்பதும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்கள் வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி ஜனதா கட்சி உட்பட பல கட்சிகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதி
ர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திற்கு உள்ளே இந்த கட்சிகளின் எம்பிக்கள் ஆவேசமாக பேசினார்
 
பாராளுமன்றத்தில் வெளியேயும் இந்த சட்ட மசோதா இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பேசினார்கள். ஆனால் இந்த மசோதா நிறைவேறும் முக்கியமான நேரத்தில் இந்த கட்சிகளின் எம்பிக்கள் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்காமல் திடீரென வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 311 எம்பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது
 
முன்னதாக இந்த மசோதா மீது சுமார் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் விவாதம் நடந்தபோது எம்பிக்களின் அனைத்து கேள்விகளுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுமையுடன் பதில் கூறினார் என்பதும், இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் விளக்கமளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமித்ஷாவின் இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர் என்றாலும் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஆச்சரியத்தை அளித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments