Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா ராணுவத்தால் கடத்தப்பட்ட இந்திய சிறுவன்! – சீனா அளித்த வாக்குறுதி!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (15:42 IST)
சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்திய சிறுவனை ஒப்படைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா – இந்தியா இடையே பல ஆண்டுகளாக எல்லையை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை நிலவி வருகிறது. சமீப காலத்தில் லடாக் மற்றும் சில பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறலும், திட்டமிட்ட குடியிருப்புகளும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.

எல்லை தொடர்பான பிரச்சினையை பேசி தீர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மித்ரரோன் என்ற சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறுவன் பாதை மாறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும் சிறுவனை பத்திரமாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க தாங்கள் தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது. அடுத்த வாரம் சிறுவன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments