Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி பட பாணியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:40 IST)
பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் மீது வாலிபர்கள் மிளகாய் பொடியை வீசி வித்தியாசமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால். இவர் மொசாபர் நகர் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவரை பார்க்க கட்சி தொண்டர்கள் வந்திருந்தனர்.
 
இந்நிலையில், 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்து பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், திடீரென எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினர்.
 
இதில், அவரது கண்களில் மிளகாய் பொடி பட்டு, எரிச்சல் ஏற்பட்டு துடித்தார். இந்த நேரத்தில் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எதற்காக அவர்கள் மிளகாய் பொடி வீசினார்கள்? என்பது தெரியவில்லை.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பெயர் தெரிய வந்துள்ளது. பியானா கிராமத்தை சேர்ந்த கபில் என்று அடையாளம் கண்டுபிடித்தனர். ஆனால், 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments