Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட பாணியில் பெண்ணுக்கு பிரசவம் !

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (22:58 IST)
ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு  மாற்றுத்திறனாளி ஒருவர் விஜய்யின் நண்பன் பட பாணியில் பிரசவம் பார்த்துள்ளார்.

டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திற்குச் சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பரிதாபாத் என்ற இடத்தைத் தாண்டியபோது, அங்கிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் வலி எடுத்தது.

அப்போது அந்தப் பெட்டியில் பெண்கள் யாரும் இல்லாத நிலையில், அதே பட்டியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அப்பெண் வேண்டாமெனக் கூறியுள்ளார். இதையடுத்து பெண் மேலும் வலியால் துடித்தார். அதைப்பார்த்த மாற்றுத்திறனாளி நபர் தான் ஒரு டெக்னீசியன் என்பதால் தனது மருத்துவருக்கு வீடியோ கால் செய்து, அவரது அறிவுரைப்படி மருத்துவம் பார்த்துள்ளார்.பின்னர் குழந்தையை தாயிடமிருந்து குழந்தையை எடுக்கும்போது, மதுரா ரயில்நிலையம் வந்துவிட்டது. அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸார் குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? விஜய்யின் தவெக விளக்கம்..

ரயில் போகும்போதே இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! இமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி!

2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த மநீம பெண் பிரபலம்! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments