Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிஷாவின் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் பினராய் விஜயன்

ஜிஷாவின் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் பினராய் விஜயன்
, திங்கள், 11 ஜூலை 2016 (11:51 IST)
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா தனது குடிசை வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.


 


இது தொடர்பாக அசாம் மாநில வாலிபர் அமிருல் இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜிஷாவிடம் அவர் சில்மி‌ஷம் செய்ததால் அவரை ஜிஷா செருப்பால் அடித்தார். அந்த ஆத்திரத்தில் அமிருல் இஸ்லாம் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.ஜிஷாவுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கான பணிகள் நடந்து வந்தபோது அவர் பலியாகி விட்டார்.

இந்த நிலையில் ஜிஷாவின் கனவை நிறைவேற்றும் வகையில் கேரள அரசு அவரது குடும்பத்திற்கு சொந்த வீடு கட்டித்தரப்படும் என்று அறிவித்தது. அதன் படி 44 நாட்களில் ரூ.11 லட்சம் செலவில் ஜிஷா பவன் என்ற பெயரில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்த வீட்டின் சாவியை ஜிஷாவின் தாயார் ராஜேஸ்வரியிடம் முதலமைச்சர் பினராய் விஜயன் ஒப்படைத்தார். கண்ணீர் விட்டு கதறியபடி அவர் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவரது நிலையை கண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கண் கலங்கினார்கள்.





 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிபோதையில் கார் ஓட்டி சிறுமியை கொன்ற மாணவன்