முதல்வர் காரில் செல்லும் போது அந்த காருக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து கார் செல்வது வழக்கம். பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்து நெரிசலையும் இதனால் ஏற்படுத்திவிடுகின்றனர்.
தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்வருடன் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
அஸ்ஸாமில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து சர்வானந்த சோனோவால் அம்மாநில முதல்வராகப் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு முதலமைச்சர் செல்லும்போது பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முதல்வர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.