Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலமைச்சரின் பதவி ஏற்பு விழா மேடையில் நரேந்திர மோடி அருகே அமர்ந்த மர்மநபர் கைது

முதலமைச்சரின் பதவி ஏற்பு விழா மேடையில் நரேந்திர மோடி அருகே அமர்ந்த மர்மநபர் கைது
, சனி, 8 நவம்பர் 2014 (13:33 IST)
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவின்போது, உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் நரேந்திர மோடி அருகே அமர்ந்திருந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
மும்பையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது, பிரதமர் அருகே மேடையில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு நபர், உரிய அனுமதி இன்றி அமர்ந்திருந்தார்.
 
விழா நிறைவில் அவர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
இதைத் தொடர்ந்து, பிரதமரின் அருகே அனுமதியின்றி ஒருவர் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மிஸ்ரா என்று தெரியவந்தது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்லையில், மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் அமர்வது நல்லது அல்ல. இதுபற்றி முதலமைச்சரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்“ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil