Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (18:38 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜார்கண்ட் மாநிலங்களூக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் இந்த தேதிகளை அறிவித்தார்.
 
அப்போது பேசிய அவர், இரு மாநிலங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்; பாதுகாப்புக்கு மத்திய மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்படுவர், இந்தத் தேர்தலில் நோட்டாவும் பயன்படுத்த வசதி செய்யப்படும் என்று கூறினார். ஜம்மு காஷ்மீரில் 10,015 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றார்.
 
நவ.25 ஆம் தேதி இந்த இரு மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 23 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.
 
காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட்டில் ஒரே கால அட்டவணையாக 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், முதல் கட்ட தேர்தல் நவம்பர் 25 ஆம் தேதியும், டிசம்பர் 2 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், 9 ஆம் தேதி 3 ஆம் கட்ட தேர்தலும், 14 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும், 5 ஆம் கட்டமாக டிசம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர்  சம்பத் அறிவித்துள்ளார்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments