Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராய்ப்பூர் அருகே தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 பேர் பலி

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (10:46 IST)
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள உர்லா என்ற கிராமத்தில் மின்சார ஃபியூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாயினர்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உர்லா என்ற கிராமத்தில் மின்சார ஃபியூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு வழக்கம் போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி கோமல் சிங் தாக்கூர், ரேக்ராம் சாகு, கணீஷ் ஹர்வன்ஷ், மக்கான்லால் நிர்மல்கர் மற்றும் புனவ்ராம் யாதா என்ற 5 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

வெடி விபத்து நடந்த போது தொழிற்சாலைக்கு வெளியே இருந்த சூப்பர்வைசர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்தறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி கோகத்தில் மூழ்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் புனேவில் நடந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்ள் புதையுண்டு போன சம்பவம் குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments