Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி... மதுப்பிரியர்களுக்கு மது விருந்து!!

Webdunia
திங்கள், 10 மே 2021 (10:33 IST)
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்கும் வசதியை சட்டீஸ்கர் அரசு அறிமுகம் செய்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா அதிகரித்தல் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சட்டீஸ்கரிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காததால் ஆல்கஹால் கலந்து ஓமியோபதி சிரப் அருந்திய 9 பேர் மரணமடைந்தனர். 
 
இதனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க சட்டீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் மதுபானங்களை ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.  

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments