Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி வேலை செய்யாததால் மூச்சு திணறிய ரயில் பயணிகள்: ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:46 IST)
ஏசி வேலை செய்யாததால் மூச்சு திணறிய ரயில் பயணிகள்: ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டிகளில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் பயணிகள் மூச்சுத்திணறி அடைந்ததால் இரண்டு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
சென்னையில் இருந்து தினமும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு பெங்களூர் சென்றடையும். ஜோலார்பேட்டை வழியாக செல்லும் இந்த ரயில் எப்போதும் பிஸியாக இருக்கும் என்பதும் குறிப்பாக ஏசி கம்பார்ட்மெண்டில் முழுமையாக பயணிகள் இருப்பார்கள் 
 
இந்த நிலையில் திடீரென இன்று பெங்களூர் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஏசி கம்பார்ட்மெண்டில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் கம்பார்ட்மெண்டில் இருந்து வெளிக்காற்று உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது
 
இதுகுறித்து டிடிஆரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜோலார்பேட்டையில் மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இதன் காரணமாக ரயில் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments