Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர்கள் துறைகள் திடீர் மாற்றம்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (22:38 IST)
மத்திய அமைச்சர்கள், ஸ்மிருதி இராணி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், ஏற்கனவே பாஜக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக வெங்கையா நாயுடுமாற்றப்பட்டுள்ளார்.
 
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, சட்டத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி ஜவுளித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும், சட்டத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
நிதித்துறை இணை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்கா, விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மத்திய ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சர் அனந்தகுமாருக்கு, கூடுதல் பொறுப்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments