Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது: இஸ்ரோ ட்வீட்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (16:54 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராயன்-3  என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்த விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நெருங்கி வருகிறது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
சந்திராயன்-3 என்ற விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது என்றும் சந்திராயன்-3 விண்கமல்ம் நான்காவது சுற்று பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்து உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் அடுத்ததாக ஐந்தாவது சுற்று பாதையை உயர்த்தும் பணி ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இஸ்ரோ  சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் வெற்றி கரமாக தரை இறக்கினால் நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை பெறும். 
 
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 3 வெண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும் இந்த விண்கலம் வெற்றி அடைந்தால் நிலவில் உள்ள மர்மங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments