Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சந்திரயான் -3 விண்கலம் வெற்றி''- டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (15:24 IST)
இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலன் நிலவில்  ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக ‘’சந்திரயான்- 3’’ க்கு கூகுள் ‘’டூடுல்’’ வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை  நிலவுக்கு அனுப்பிய நிலையில்,  விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத்  நிலவில் தரையிறங்கியது.

இதற்கு  உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன. இந்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா  நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலம்  ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக ‘’சந்திரயான்- 3’’ க்கு கூகுள் ‘’டூடுல்’’ வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments