Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடியுடன் கூடிய கனமழை : 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 7 மே 2018 (12:41 IST)
அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
தற்போது கோடை காலம் என்பதால், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும், அக்னி வெயிலும் தொடங்கிவிட்டதால் வெளியே நடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையில், கடந்த முன்பு சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழையும், கடுமையான புழுதிப்புயலும் வீசியது.  இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிந்தனர். மேலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.
 
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வெப்பச்சலனம்  காரணமாக சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments