தீபாவளியில் பரவும் கொரோனா; 9 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (09:04 IST)
இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது மிகவும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களும் நெருங்கியுள்ளன. இதனால் மக்கள் பொருட்கள் வாங்க, விற்க பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சலபிரதேசம், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் சுகாதார அமைச்சர்களோடு காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், மேற்கண்ட 9 மாநிலங்களில் நோய் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments