Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'6 வயது நிரம்பிய பின்னரே 1ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (17:29 IST)
குழந்தைகள் 6 வயது நிரம்பிய பின்னர் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 
 
அதில் ’நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் வயதை ஆறாக உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் மூன்று வயதில் குழந்தைகளைப் பிரிகேஜி உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கலாம் என்றும் எல்கேஜி யுகேஜி படிக்க அனுமதி உண்டு என்றும் ஆனால் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அந்த குழந்தைக்கு ஆறு வயது இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments