Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்ல கொரோனா தடுப்பூசி.. அப்புறம்தான் போலியோ மருந்து! – மத்திய அரசு எடுத்த முடிவு!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:28 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க இருப்பதால் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அதற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் முன்னதாக ஜனவரி 17 முதல் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொது கொரோனா தடுப்பூசி வழங்குவது அவசியம் என்பதால் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments