Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தபட்ச ஜிஎஸ்டி 8 சதவீதமாக உயர்வா? – ஆலோசனை குழு முடிவு!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:22 IST)
இந்தியா முழுவதும் குறைந்தபட்ச ஜிஎஸ்டி 5 சதவீதமாக உள்ள நிலையில் அதை 8 சதவீதமாக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை உள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இந்த வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி 4 வகைகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி மூலமாக வரி வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இதுவரை 4 வகைகளில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியை மூன்றாக குறைக்க பரிந்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுவரை குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 8 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1.50 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments