Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத் பெட்ரோலியம், எல்ஐசி, ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:11 IST)
மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சுகாதாரம், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான நிலையில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடு சதவீதம் 49லிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்க IPO திட்டமும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments