Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட் விண்ணபிக்க இனி இது தேவையில்லை!!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (19:09 IST)
இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 
 
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள், பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக வைக்க வேண்டும். இந்த வழிமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
பிறப்பு சான்றிதழுக்கு பதிலாகப் பிறந்த தேதியை உறுதிப்படுத்த ஆதார், பான் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், அரசு ஊழியர்களாக இருந்தால் பணி அனுபவச் சான்று, ஓய்வூதியச் சான்று போதுமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஸ்போர்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், தந்தை அல்லது தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. திருமணமானவர்கள் தங்களது திருமண சான்றிதழை விண்ணப்பத்தின் போது அளிக்கத் தேவையில்லை. 
 
பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் சான்றுகள் 15-ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்